சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பிரிவில், இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளுக்கு செயற்கையாக ஆதரவளிப்பதுடன், சிறுநீரகம் உள்ளிட்ட பிற உறுப்புகளின் செயல்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவுடன், இந்தப் பிரிவை டாக்டர் கே. மதன் குமார் வழிநடத்த உள்ளார் .
















