மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடி தலைமையில் பாரத மாதாவுக்கும், தமிழகத்திற்கும் சேவையாற்றியதை வாழ்நாளின் பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
கூலித் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்து, பிரதமர் . நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றியது வாழ்வின் மிகச்சிறந்த பாக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கட்சியை வலுப்படுத்த முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகம் தெரிவித்துள்ளார்.
















