வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் ஈரோடு, திருப்பூர், விருதுநகர், குமரி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 27 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை மற்றும்
திருவாரூர், தஞ்சை, கடலூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நெல்லை, நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
















