வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 22 முதல் 28-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வரும் 25 முதல் 27-ஆம் தேதிக்குள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அக்டோபர் 25 முதல் 28ஆம் தேதிக்குள் அரபிக் கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் அக்டோபர் 22 முதல் 28-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
















