அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் - இந்தியா கடும் எச்சரிக்கை!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் – இந்தியா கடும் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனத் தரப்பு எவ்வளவு மறுத்தாலும் இந்த மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றப் போவதில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நீண்டகாலமாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே லடாக் பகுதியில் எல்லையோரமாகச் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனாவின் “தெற்கு திபெத்” என்று கூறிவருகிறது. இந்த நிலையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை, ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் 18 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்துச் சீன அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி, லண்டனில் இருந்து ஜப்பானுக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் சீனாவில் ட்ரான்சிட் எனப்படும் காத்திருக்கும் நேரத்தில் இந்தியா பாஸ்போர்ட் செல்லாது என்று கூறி துன்புறுத்தியதாகப் பெமா வாங் தாங்​ குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு சோதனையின் ‘இந்தியா, இந்தியா என்று கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை தனியாக அழைத்துச் சென்றதாகவும் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஷாங்காய் வழியாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்ததாகவும், இம்முறை கிளம்பும் முன் இந்திய குடிமக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று லண்டனில் உள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையின் போது, சீன குடியேற்ற அதிகாரிகளும் China Eastern Airlines ஊழியர்களும் தன்னை கேலி செய்ததாகவும், “சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தெளிவான தகவல், சரியான உணவு அல்லது விமான நிலைய வசதிகளைப் பயன்படுத்தும் உரிமைகளும் தனக்கு மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்ட தம்மை இந்திய தூதரக அதிகாரிகள், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு பத்திரமாக வழியனுப்பி வைத்ததாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆன்லைனில் தம்மை ட்ரோல் செய்வதைக் கண்டித்துள்ள பெமா வாங் தாங், மத்திய அரசால் எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்றும், அனைத்து இந்தியர்களின் கண்ணியத்துக்காகவே என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எக்ஸ் தளத்தில் இல்லை என்றாலும், தனக்கு ஆதரவாகப் பேசிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள்ளார். இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியரை விமான நிலையத்தில் தடுத்து வைத்த விவகாரம்குறித்து சீன அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச விமானப் பயணத்தை நிர்வகிக்கும் பல மரபுகளை மீறும் வகையில் நடந்து கொண்ட சீன அதிகாரிகளால் தங்கள் செயல்களை இன்னும் விளக்க முடியவில்லை என்று கூறியுள்ள ஜெய்ஸ்வால், சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் 24 மணிநேரம் வரை விசா இல்லாத போக்குவரத்தை அனுமதிக்கும் சீனாவின் சொந்த விதிமுறைகளையும் மீறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Indiaஇந்தியாChinese officials violated Arunachal woman - India issues strong warningஇந்தியா கடும் எச்சரிக்கைஅருணாச்சல பெண்சீன அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

26/11 பயங்கரவாத தாக்குதல் இனி நடக்கவே நடக்காது : தேசமே உறுதி ஏற்பு!

Next Post

கருப்பு நிற கேரட் : களைகட்டும் சாகுபடி : ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies