எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல் : அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு - சிறப்பு தொகுப்பு!
Jul 23, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல் : அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 7, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஆழ்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு இருப்புகளை ஆயில் இந்தியா நிறுவனம் கண்டறிந்துள்ளது. அந்தப் பகுதியி வெற்றிகரமாக கண்டுபிடித்த இரண்டாவது எரிவாயு கிணறு இது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தக் கண்டுபிடிப்பு எரிபொருள் துறையில் தன்னிறைவை நோக்கி முன்னேறும் இந்தியாவின் மற்றொரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், 355 மீட்டர் ஆழமுள்ள கடற்பகுதியில் ஸ்ரீ விஜய புரம்-3 ஆய்வுப் பகுதி அமைந்துள்ளது.

திறந்த பரப்பு உரிமக் கொள்கையின் கீழ் ஆயில் இந்தியா நிறுவனம், இந்தப் பகுதியில் நடத்திய ஆய்வில் சுமார் 355 மீட்டர் ஆழத்தில் மற்றொரு கடல்சார் இயற்கை எரிவாயுவைக் கண்டறிந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு வலுவான ஹைட்ரோகார்பன் அறிகுறிகளை வெளிப்படுத்துவதுடன், உள்நாட்டு எரிசக்தி வளங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான ஆய்வு முயற்சிகளின் வெற்றியாக கருதப்படுகிறது.

இந்தத் தகவலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

ஈயோசீன் (Eocene) பாறை அமைப்பில் 1,900 மீட்டருக்கும் மேல் ஆழத்தில் உள்ள ஒரு பாறையில் ஆரம்பக்கட்ட சோதனை நடத்தப்பட்டது.

துளையிடல் (perforation) பணிக்குப் பிறகு, அக்கிணற்றில் அழுத்தம் விரைவாக அதிகரித்ததுடன் உற்பத்தியும் தொடங்கியது. இது அப்பகுதியில் உள்ள நிலத்தடி எரிவாயு சேமிப்புப் பகுதியின் (reservoir) சிறப்பான தன்மைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சோதனையின் போது, ​​எரிவாயு தொடர்ந்து எரிந்ததன் மூலம் அங்கு எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த எரிவாயுவை மாதிரி ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அரிய கண்டுபிடிப்பு, 2025-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட ‘சமுத்ரா மந்தன் மிஷன்’ (Samudra Manthan Mission) திட்டத்தின் நோக்கங்களை வலுப்படுத்தியுள்ளது.

அந்தமான் படுகையில் ‘ஆயில் இந்தியா’ நிறுவனம் இதுவரை தோண்டிய மூன்று கிணறுகளில், இரண்டில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த எரிவாயு கண்டுபிடிப்புகள், இந்தியாவின் கடலோர ஆய்வு முயற்சிகளுக்கு, குறிப்பாக அதிகம் ஆராயப்படாத அந்தமான் படுகையில், ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.

அந்தமான் பகுதியில் ஹைட்ரோகார்பன் வளத்தை வெளிக்கொணரும் நோக்கில், தீவிரப்படுத்தப்பட்ட ஆய்வு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் வழிவகுக்கும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது செயல்படும் பெட்ரோலிய அமைப்பின் ஒரு முக்கியக் குறியீடாக விளங்குவதாகவும், படுகைக்குள் கூடுதல் ஹைட்ரோகார்பன் படிவுகள் இருப்பதைக் குறிக்கக்கூடும் என்றும் ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய ஸ்ரீவிஜயபுரம்-2 கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, ஒரு விரிவான மதிப்பீட்டுத் திட்டத்தை ஆயில் இந்தியா நிறுவனம் தொடங்கியது.

நில அதிர்வுத் தரவுகளை மறுசெயலாக்கம் செய்தல் மற்றும் கிட்டத்தட்ட 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான கூடுதல் முப்பரிமாண (3D) நில அதிர்வுத் தரவுகளைப் பெறுதல் ஆகிய ஆய்வுகளை முன்னெடுத்தது.

தரவு செயலாக்கம் மற்றும் விளக்கம் நடைபெற்று வருவதாகவும், இது எதிர்கால மதிப்பீட்டுத் துளையிடல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பச் சிறப்பின் மூலம் ஆய்வை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாதுகாப்பான எரிசக்தி எதிர்காலத்திற்காக நாட்டின் ஹைட்ரோகார்பன் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கும் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த வெற்றி, உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஆழ்கடல் எரிசக்தி வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தியாவுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்

நாட்டின் ‘அம்ரித் கால்’ (Amrit Kaal) காலக்கட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்பு எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

அந்தமான் கடலோரப் பகுதியில் மூன்று ஆய்வுக்கிணறுகளில் இருந்து இரண்டு வெற்றிகரமான எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனி அந்தமான் கடலோரப் பகுதி, எதிர்கால எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளுக்கான இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பகுதியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags: Andaman Islands.'Sri Vijaya Puram-3' exploration sitePetroleum and Natural GasEocene geological sequencegasHardeep Singh PuriOil India LimitedOpen Acreage Licensing Policy
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் வசதி – அறநிலையத்துறை திட்டம்!

Next Post

பலூச் அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி : பாகிஸ்தான் சீனாவின் திட்டம் தோல்வி – செக் வைத்த அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies