ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் - சிறப்பு தொகுப்பு!
Oct 15, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 16, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை அடுத்த உச்ச தலைவராக முன்மொழிய அந்நாட்டு மதகுருமார்கள் தயாராகி வருகின்றனர். ஈரானின் அதிகார மையத்தில் என்ன நடக்கிறது? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

அணு ஆயுத திட்டங்களை ஈரான் கைவிட அறிவுறுத்தி, அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதலைத் தொடர்ந்தன. இந்தத் தாக்குதலில் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி, அந்நாட்டின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றார்.

ஆனால் பதவியேற்ற பிறகு, அவர் ஒருமுறைகூட பொதுமக்கள் முன்பு தோன்றவில்லை. தந்தையின் இறுதிச் சடங்கில் மற்ற 3 மகன்களும் பங்கேற்ற நிலையில், மொஜ்தபா கமேனி பங்கேற்காதது, ஈரான் மக்களிடையே மட்டுமல்ல, உலக நாடுகளிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மொஜ்தபா கமேனியின் முகம் சிதைந்து, உருவமே மாறியதாக கூறப்படும் நிலையில், அதனால்தான் அவர் பொதுவெளியில் வர தயங்குவதாக ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக அவர் ரகசிய இடத்தை விட்டு வெளிவர மறுப்பதாக மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர்.

இருப்பினும், மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாததற்கு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமா? உடல்நலப் பிரச்சினையா? அல்லது திரைமறைவில் இருந்து காய்களை நகரத்துகிறாரா? என்ற விவாதம் சர்வதேச அளவில் நடைபெற்று கொண்டுதான் வருகின்றன.

இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல் படையை நிறுவியவருமான அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனி மீது மதகுருமார்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாததால், மத அடையாளத்திலும், புரட்சிகர தலைவரின் வாரிசு என்ற அரசியல் அடையாளத்திலும் அலி கமேனியை அடுத்த உச்ச தலைவராக முன்னிறுத்த மதகுருமார்கள் தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இது அதிகார மாற்றமா? அல்லது தற்போதைய ஆட்சிக்கு கூடுதல் ஆதரவை உருவாக்கும் அரசியல் நகர்வா? என்பது இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.

அமெரிக்கா உடன் ஈரான் மீண்டும் ஒரு போரில் ஈடுபட்டுள்ள இந்தத் தருணத்தில், அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கக் கூடிய தலைமை மதகுரு கிட்டத்தட்ட செயல்படாத நிலையில் தான் இருக்கிறார். இதனால், அந்தப் பொறுப்பில் அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை உடனடியாக நியமித்து, வெற்றிடத்தை நிரப்ப மதகுருமார்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பின்புலத்தில் மிகப்பெரிய காரணமும் இருக்கிறது. ஈரானில் அதிபரை விட உச்சத் தலைவருக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. ராணுவம், நீதித்துறை, வெளியுறவுக் கொள்கை, அணு ஆயுதத் திட்டம் என முக்கிய முடிவுகள் அனைத்திலும் உச்சத் தலைவரின் பங்கு அளப்பரியது.

அதனால்தான், உச்சத் தலைவர் பொதுவெளியில் தோன்றாத நிலையில், அவருக்கு பதிலாக ஈரானில் புதிய அதிகார மையம் உருவாகிறதா? என்ற கேள்வி சர்வேச அளவில் எழுந்திருக்கிறது.

ஒருபுறம் ஈரானில் அமெரிக்கா நிகழ்த்திய போரின் காயங்கள் இன்னமும் ஆறாத ரணமாக தொடர்கிறது. மறுபுறம், ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் அதிகார மையத்தில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் ஈரானின் எதிர்காலத்தை மட்டுமல்ல, மத்திய கிழக்கின் அரசியல் போக்கையும் தீர்மானிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது…

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran warAli Khamenei grandsoniran warStrait of HormuzIran-US warMojtaba Khameneiiran war news
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை!

Next Post

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies