வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொது மக்களிடையே பெரும் வரவேற்பை கையடக்க விசிறிகளால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தாக மாறும் என்று உலகளாவிய சுற்றுச் சூழல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். அது எப்படி சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மிகச் சிறியதாக இருப்பதால் மட்டுமல்ல அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் கையடக்க சிறிய மின்விசிறிகள் உலகமெங்கும் பிரபலமாகி உள்ளன.

குறிப்பாக காலையில் சமையலறையில், மதியம் மேஜையில், மாலையில் படுக்கையறையில் என ஒவ்வொரு இடத்துக்கும் பல மின்விசிறிகள் தேவையில்லாமல் அமர்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்து இந்த கையடக்க மின்விசிறியை மாற்றிக்கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பம்சமாகும். மேலும் பெரிய ஏசி அல்லது மின்விசிறிகளை விட மிகக் குறைந்த அளவு மின்சாரத்தையே இந்த மின்விசிறிகள் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

இதனாலேயே பல வீடுகளில் ஒவ்வொரு முறையும் AC யைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீண்ட நேரம் மின்விசிறியைப் பயன்படுத்துவதையே விரும்புகின்ற சூழலில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கையடக்க மின்விசிறிகளே பலரின் விருப்பத் தேர்வாக உள்ளன. சொல்லப்போனால் பேருந்திலோ, பூங்காவிலோ அல்லது ரயிலுக்காகக் காத்திருக்கும்போதோ மக்கள் இந்த விசிறியைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

பெரும்பாலும் ஆன்லைனில் மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த கையடக்க மின் விசிறிகள் தற்போது பெரிய பெரிய சூப்பர்மார்க்கெட்டில் பணம் செலுத்தும் இடங்களிலும் தள்ளுபடி விலையில் விற்கும் சிறு சிறு கடைகளிலும் அதிக அளவில் விற்கப் படுகின்றன.

பொதுவாக குறைந்த விலையில் கிடைக்கும் இந்தமாதிரியான மின்சாதனங்கள், விரைவாக வாங்கப்பட்டு, சிறிது காலம் பயன்படுத்தப்பட்டு, பின்னர் தூக்கி எறியப்படும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக சார்ஜிங் கேபிள்கள் தொடங்கி இந்த கையடக்க விசிறிகள் வரை சொல்ல முடியும்.

200 கிராம் எடையுள்ள இந்தச் சாதனத்தில் தாமிரக் கம்பிகள், அரிய வகை காந்தங்கள் (rare-earth magnets) மற்றும் மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரிகள் உள்ளன. இந்தப் பொருட்களே சுற்றுச்சூழளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஒவ்வொரு விசிறியிலும் இந்தப் பொருட்கள் குறைந்த அளவிலேயே இருந்தாலும், மின்னணுக் கழிவு என்பது ஒரு வளர்ந்து வரும் பிரச்சினையாகவே உள்ளது.

எளிதில் பழுதாகும் கையடக்க விசிறிகள் குப்பைகளில் வீசப்படுவதால் நச்சுக்கழிவுகள் மண்ணில் கலக்கின்றன. இவற்றில் உள்ள லித்தியம் பேட்டரிகள் தயாரிக்கச் செய்யப்படும் கனிமங்களால் நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டலம் சீரழிகிறது. மலிவான பிளாஸ்டிக்கால் செய்யப்படுவதால் மறுசுழற்சி செய்ய முடியாமல் பல ஆண்டுகள் அழியாமல் தங்குகின்றன.

2026-ல் இங்கிலாந்தில் மட்டும் 80 லட்சத்துக்கும் அதிகமான கையடக்க விசிறிகள் வாங்கப்படும் என்றும் இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்த விற்பனை 98 லட்சத்தைத் தாண்டும் என்றும் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகளால், கையடக்க மின்விசிறிகளின் ஆண்டு விற்பனை 1.14 கோடியைத் தாண்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இன்னொரு புறம் 2026-ல் சுமார் 1.8 மில்லியன் கையடக்க மின்விசிறிகள் குப்பையில் வீசப்பட்டுள்ளன என்றும், அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2.6 மில்லியனாக உயரும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.

கழிவு சேகரிப்பு வாகனங்களால் அல்லது கழிவு சுத்திகரிப்பு வகைப்படுத்தும் மையங்களில் இந்த மின்விசிறிகள் நசுக்கப்படும்போது அவை தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஏற்படும் தீவிபத்துகள் கழிவு மேலாண்மைத் துறை முழுவதும் ஒரு பெரும் பிரச்சனையாக மாறும் என்றும் கூறப்படுகிறது.

நீண்ட காலம் நீடித்து உழைக்கக்கூடிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் பழுதுபார்க்கக்கூடிய பொருட்களை வடிவமைப்பது உற்பத்தியாளரின் பொறுப்பு என ஒரு சுற்றுச்சூழல் கொள்கையை நடைமுறை படுத்த வேண்டிய நேரமிது என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

வசதியானது ,மலிவானது என்பது சாதகமாக இருந்தாலும் மறுபயன்பாடு, பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி என்பவை சுற்றுச் சூழலுக்குப் பெரும் சவாலாகவே உள்ளன.

Tags: Global environmental experts warninghandheld fansHandheld electric fanlow-cost electronic devicesGlobal environmental experts
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

Next Post

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies