கிராம மக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Jan 13, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராம மக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 30, 2023, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மூன்றாவது நாளாக முதுகுளத்தூர்  சட்டமன்றத் தொகுதியில் மக்களைச் சந்தித்தார்.

இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்  மனதின் குரல் நிகழ்ச்சியை இராமநாதபுரத்தில் தொண்டர்களுடனும் கிராம மக்களுடனும் சேர்ந்து கேட்டது மகிழ்ச்சியைத் தந்தது என்று அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.

தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டுப் பேசியது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமை. திரு சுரேஷ் ராகவன் அவர்கள், பறவைகள், விலங்குகள் ஓவியங்களை வரைவதோடு, அவற்றைப் பற்றிய தகவல்களையும் ஓவியங்கள் மூலம் ஆவணமாக்கி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.

தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள்… pic.twitter.com/8ievZtyQvh

— K.Annamalai (@annamalai_k) July 30, 2023

நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் விதமாக, ‘என் மண் என் தேசம்’ திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளில் சிறப்புக் கல்வெட்டுகள் நிறுவப்படும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் மற்றும் மரக்கன்றுகள் கொண்டு வந்து, தேசிய போர் நினைவிடம் அருகே நடப்படும் என்றும் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகழ் இதன் மூலம் நாட்டிற்கே தெரியப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், பழமையான சோழர் காலத்துச் சிற்பங்கள், கலைப் பொருள்களை, பிற நாடுகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டும் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றி நம் நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சியில், நம் நாடு, ஒரே பாரதம் உன்னத பாரதமாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

 

Tags: k Annamalai BjpTamilNadu Bjppolitical news
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்- மனதின் குரலில் பிரதமர் மோடி வேண்டுகோள் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

Next Post

மும்பை விரைவு இரயிலில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies