இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த 2 போட்டிகள் முடிவில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 200 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றி வெற்றிப்பெற்றது . இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோரின் உதவியுடன் அரை சதம் அடித்து 351 ரன்கள் குவித்தது.
Player of the Series 🌟
Ishan Kishan registered a half-century in each of the three ODIs during the #WIvIND series 🔥
More 👉 https://t.co/7S3vhyxzfs pic.twitter.com/524BpRoQTL
— ICC (@ICC) August 2, 2023
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் அரைசதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.