இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டி இல்லை - அமித்ஷா
Oct 1, 2026, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டி இல்லை – அமித்ஷா

10 மொழிகளில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - அமித்ஷா

Murugesan M by Murugesan M
Aug 5, 2023, 03:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுடெல்லியில் இன்று மத்திய உள்துறை அமித்ஷா தலைமையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம்  நடைபெற்றது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையின் 12 ஆவது தொகுதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமித்ஷா இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை. அனைத்து இந்தியா மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என்றார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஐந்து உறுதிமொழிகளை நாட்டின் முன்வைத்துள்ளார். பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் அடிமைத்தனத்தின் அடையாளங்களை அழிப்பது, இவற்றை 100% செயல்படுத்துவதற்கு அனைத்து இந்திய மொழிகளும் மற்றும் ஆட்சி மொழியும் வலிமை படுத்த வேண்டும்.

மொழிக்கு மதிப்பு கொடுக்காமல் பாரம்பரியத்தை மீட்க முடியாது. உள்ளூர் மொழிகளுக்கும் மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இந்தி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை, அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும். ஆட்சி மொழியின் வேகம் மந்தமாக இருந்தாலும், எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல், அதனை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை 10 மொழிகளில் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி எடுத்துள்ளார், விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த கல்வியை பெற முடியும். அந்த தருணம் உள்ளூர் மொழிகள் மற்றும் அலுவல் மொழிகளின் எழுச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலகளாவிய மேடையில் பெருமையுடன் முன்வைப்பதால், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கு வேறு எந்த சாதகமான தருணமும் இருக்க முடியாது என்று கூறினார்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒரு உரை கூட ஆங்கிலத்தில் ஆற்றியதில்லை, அரசாங்கத்தின் அமைச்சர்களும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர், இது பல்வேறு மொழிகளை இணைக்கும் இயக்கத்திற்கு உத்வேகத்தை அளிக்கிறது.

அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரவில்லை, மாறாக நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து வருகிறது. அடிமைக் காலத்திற்குப் பிறகும் இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் அப்படியே இருப்பது பெரிய சாதனை. நமது நாட்டை ஒன்றிணைக்க மொழிகள் வேலை செய்துள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் ஒன்பது தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2019 முதல் மூன்று தொகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் பாடவாரியாக தயாரிக்கப்பட்டுள்ளன. 12வது தொகுதியின் கருப்பொருள் ‘எளிமைப்படுத்துதல்’.

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினார்களுக்கும் நன்றி தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்காலத்திலும் அலுவல் மொழியை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் இந்த குழு தொடர்ந்து பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப், மத்திய உள்துறை இணையமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா, திரு நிஷித் பிரமானிக் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags: languageMedicalAmith shaHindi
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத்தொடங்கியது.

Next Post

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

Load More

அண்மைச் செய்திகள்

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies