கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!
Jun 14, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 5, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் 3 பேரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனால், கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டிருக்கிறது.

நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளதால் உத்தரகண்ட் மாநிலம் கடவுளின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இத்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது தீராத ஆவல்.

குறிப்பாக, 12 ஜோதிர்லிங்க தலங்களில்  ஒன்றாக அமைந்த கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட கோடை காலங்களில்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் கேதார்நாத் யாத்திரை தொடங்கியது. பக்தர்களும் ஆர்வமுடன் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கௌரிகண்ட் என்கிற பகுதியில் மலைப்பாதையில் நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீதி பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், மலைப்பாதை மிகவும் சேதமடைந்திருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக, கேதார்நாத் யாத்திரையைத்  தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் கூறுகையில், “கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த 3 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், கடை வைத்திருந்த 19 பேரைப்  காணவில்லை. காணாமல் போனவர்களை மாநிலப் பேரிடர் மீட்புப்படை குழுவினரும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் தேடி வருகின்றனர்.

மேலும், காணாமல் போனவர்கள் அனைவருமே அங்கு கடைகளை நடத்தி வந்தவர்களாக இருக்கக் கூடும். யாத்திரை வந்தவர்கள் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உத்தரகண்ட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கேதர்நாத் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த விபத்தும் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

Tags: kedarnathSivalingamJyotirlinga
ShareTweetSendShare
Previous Post

இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டி இல்லை – அமித்ஷா

Next Post

குறள் உணர்த்தும் இலக்கியங்கள்…

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies