செந்தில் பாலாஜி தம்பி பங்களா முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
Sep 12, 2026, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி தம்பி பங்களா முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 11:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் இராம் நகரில் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக முடக்கி இருக்கிறார்கள்.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இருவருமே ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 14-ம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செயதனர். இதன் பிறகு, நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை, ஆட்கொணர்வு மனு என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இதன் பிறகும், விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி இதுவரை ஆஜராகவில்லை. இந்த சூழலில், செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் வீட்டிலும், ஆடிட்டர் சதீஷ்குமார் வீட்டிலும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

துணை இராணுவப்படை பாதுகாப்புடன் 2 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், முதலில் கரூர் இராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக் குமார் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இராம் நகரில் அசோக் குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவுக்குச் சென்றனர். அங்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் நில அளவையர்களுடன் சென்றவர்கள், நிலத்தை அளவீடு செய்து, கட்டடத்தை மதிப்பீடு செய்தனர்.

மேற்கண்ட நிலம் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் இருக்கிறது. ஆகவே, நிலம் தொடர்பான ஆவணங்களுடன் நிர்மலா நேரில் ஆஜராகும்படி, அக்கட்டடத்தில் சம்மன் ஒட்டி விட்டுச் சென்றனர். தொடர்ந்து, இராம் நகரிலுள்ள பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்துக்குச் சென்றவர்கள், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 10.85 லட்சத்திற்கு பதிவு செய்தது தொடர்பாக சார் பதிவாளர் பொறுப்பு சம்பூர்ணம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் கொடுத்தனர்.

மேலும், இராம் நகரில் அசோக் குமார் புதிதாகக் கட்டி வரும் பங்களாவை முடக்கம் செய்திருப்பதாகவும், ஆகவே, மேற்கண்ட பங்களாவை விற்பது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் சார் பதிவாளருக்கு கடிதம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஆடிட்டர் சதீஷ் குமார் அலுவலகத்துக்குச் சென்றவர்கள், அங்கு அவர் இல்லாததால், நேரில் ஆஜராகும்படி அவரது அலுவலகத்திலும் சம்மன் ஒட்டி விட்டுச் சென்றனர்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து வரும் நிலையில், அவரது தம்பி வீட்டில் சோதனை நடத்தியதோடு, புதிதாக கட்டப்பட்டு வரும் பங்களாவையும் முடக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Senthil balaji brother AshokkumarSenthi BalajiAshok kumarKarur Senthil Balaji
Share
Tweet
SendShare
Previous Post

வங்கி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குச் சிறை!

Next Post

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies