கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு
Sep 9, 2026, 10:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 16, 2023, 06:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுக்கும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு மாநிலங்களிலும் 58 பேர் உயிரிழந்தனர். இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இரு மாநிலங்களிலும் வளர்ச்சிப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று சுதந்திர தின விழா, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் இன்றி எளிமையாக நடத்தப்பட்டதாக சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.

மேலும் , ‘‘மாநிலத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். மீட்புபணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், உத்தராகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள நைட் லைஃப் பாரடைஸ் கேம்ப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், இன்னும் 4 பேர் நிலச்சரிவில் சிக்கியிருப்பர் என அஞ்சப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில், மிக அதிக கனமழை கடந்த திங்கள் கிழமை பதிவாகியது. இங்கு கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். 10 பேரை காணவில்லை. நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில் சார்தாம் யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்கா-சிம்லா, கிரத்பூர் – மணாலி, பதன்கோட் – மாண்டி, தர்மசாலா- சிம்லா வழித்தடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து தடைப்பட்டது.

உத்தராகண்ட் ஜோஷிமத் பகுதியில் உள்ள சுனில் கிராமத்தில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மழையினால் பாதிப்படைந்த பகுதிகளைப்  பார்வையிட்ட உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மழை பாதிப்பு குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

Tags: rainRain In uttarakhandUttarakhandUttarakhand CMUttarakhand RainUttarakhand Rain issue
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா சுதந்திர தினம் – சர்வதேச நாடுகளில் கொண்டாட்டம்

Next Post

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்குத் தடை!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies