திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்க மத்திய அரசின் கல்வித் திட்டங்களை எதிர்க்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய என் மண் என் மக்கள் பயணம், மண்டைக்காடு அம்மன் அருள்பாலிக்கும் குமரி மண்ணின் குளச்சலில், பாரதப் பிரதமர் மீது பேரன்பு கொண்ட பொதுமக்களால் சிறப்புற்றது.
குளச்சல் மக்கள் போராட்ட உணர்வு, 1741 ஆம் ஆண்டு டச்சுப் படைகளுக்கு எதிரான போரிலேயே வரலாற்றில் இடம்பெற்றது. 1936 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் மண்டைக்காடு கோவில் மாசிக் கொடையை, மக்களை மத ரீதியாகப் பிரிப்பதற்காக, இந்த ஆண்டு தடை செய்ய முயற்சித்த திமுக அரசு, அதே குளச்சல் மக்கள் போராட்ட உணர்வுக்குப் பணிந்திருக்கிறது.
கர்மவீரர் காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர், உள்துறை அமைச்சராக இருந்த திருமதி லூர்தம்மாள் சைமன், குளச்சலைச் சேர்ந்தவர்.
அப்படிப்பட்ட குளச்சல் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், அவரது மகன்கள் எல்லாம் அடாவடி செய்கிறார்களே தவிர மக்களுக்கான பணிகள் எதையும் செய்வதில்லை.
குமரியின் விவசாயப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு கொடுத்தது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு.
மோடியின் முகவரி : குளச்சல்
மத்திய அரசின் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு நிதி மூலம் பலனடைந்த கப்பியரை கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் திரு ஜான்சன், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் தொழில் முனைவராகியிருக்கும் திரு அன்பழகன், நமது பாரதப் பிரதமரின்
One Rank One Pension என்ற முன்னெடுப்பினால் பலனடைந்த திரு கோபி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் மருத்துவக் காப்பீடு பெற்று பயனடைந்த திரு ராமையன், செல்வமகள் திட்டத்தின் மூலம் பலனடைந்த திருமதி வித்யா. இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
குமரி மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, படித்த இளைஞர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான ரப்பர் பூங்கா, தொழில் நுட்பப் பூங்கா என திமுக ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறார்களா? திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்க மத்திய அரசின் கல்வித் திட்டங்களை எதிர்க்கிறார்கள். குமரியின் கனிம வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு அமைச்சர் மலைமுழுங்கி மனோ தங்கராஜ் முக்கியக் காரணம். உரிமம் இல்லாமல் குவாரிகள் இயங்குவது அமைச்சருக்குத் தெரியாதா.
குமரி மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, படித்த இளைஞர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான ரப்பர் பூங்கா ,தொழில் நுட்பப் பூங்கா என திமுக ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறார்களா? திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்க மத்திய அரசின் கல்வித் திட்டங்களை எதிர்க்கிறார்கள்.… pic.twitter.com/e25GR8EF2n
— K.Annamalai (@annamalai_k) August 17, 2023
வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக, பெருந்தலைவர் காமராஜர் காலத்திலிருந்தே தேசியத்தின் பக்கம் நிற்கும் குமரி மண் முழு ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.