நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ரூ.610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ‘சந்திரயான் – 3’ விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை (ஆகஸ்ட் 23) சரியாக 6.04 pm மணியளவில் நிலவில் மெதுவாக சந்திரயான் -3 தரையிறங்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக கூகுள் ஒரு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
கூகிள் முதல் பக்கத்தில் அன்றைய நாட்களுக்கான சிறப்பு வாய்ந்த நபர்கள், நகரம், சின்னம், முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை கௌரவப்படுத்தவும் நினைவுகூரவும் டூடுள் வெளியிடும்.
அந்த வகையில் நேற்று சந்திரயான் -3 நிலவின் தென்துருவதில் மென்மையாக தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக இன்று அதனை காட்சிப்படுத்தும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் பலரால் ரசிக்கப்படுகிறது.