பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு நாளை வருகிறார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்ட் ரோவர் கடந்த 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சரியாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திரயான்-3 வெற்றியின் மூலம் இனி நிலவு குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆகவே, இது உலகத்துக்கே இந்தியா தந்த பெரிய உதவியாக அமைகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக தலைவர்கள் அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி வருகின்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சென்றுப் பாராட்ட டெல்லியில் இருந்து, நாளை மாலை 5:55 மணிக்கு, பெங்களூரின் எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்திறங்கும் பிரதமர் மோடி, இரவு 7:00 மணிக்கு இஸ்ரோவுக்கு செல்கிறார்.
அன்று இரவு 8:00 மணி வரை, இஸ்ரோ அலுவலகத்தில் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்; அவர்களது சாதனையை பாராட்டி பேசுகிறார்.