ஆன்லைன் சூதாட்டம் விளம்பரங்களுக்குத் தடை-மத்திய அரசு எச்சரிக்கை!
Nov 15, 2026, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆன்லைன் சூதாட்டம் விளம்பரங்களுக்குத் தடை-மத்திய அரசு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 06:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சூதாட்டம் குறித்த நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் . இதைக் கடைபிடிக்கத் தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடக நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

ஊடக நிறுவனங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட பிரிவினர்களையும், எந்தவொரு வடிவத்திலும் பந்தயம், சூதாட்டம் குறித்த விளம்பரங்கள், விளம்பர உள்ளடக்கத்தைக் காட்டுவதைத் தவிர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கத் தவறினால், பல்வேறு சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட, பந்தய தளங்களின் விளம்பரங்கள் நுகர்வோருக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, நிதி மற்றும் சமூகப்பொருளாதார ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்காக, சூதாட்டப் பயன்பாடுகளின் பயனர்களிடமிருந்து கணிசமான பணத்தை வசூலித்த முகவர்களின் நெட்வொர்க்கிற்கு எதிராக சமீபத்திய மத்திய அரசின் நடவடிக்கை மேற்கொண்டது. இந்தப் பொறிமுறை பணமோசடி நெட்வொர்க்குகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது, இதனால் நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுடன், இதுபோன்ற விளம்பரங்களுக்கு பணம் செலுத்த கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். அந்த வகையில், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது சூதாட்டம் மற்றும் சூதாட்டத் தளங்களின் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்கள் அனுமதித்து வருகின்றன.  மேலும், குறிப்பாக கிரிக்கெட் போன்ற ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வின் போது இதுபோன்ற பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களை ஊக்குவிக்கும் போக்கு இருக்கிறது. அத்தகைய ஒரு முக்கியமான சர்வதேச நிகழ்வு இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது.

பந்தயம், சூதாட்டத் தளங்களை விளம்பரப்படுத்துவதற்கு எதிராக ஊடக தளங்களை எச்சரிக்க அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் இந்திய பார்வையாளர்களைக் குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 13.06.2022, 03.10.2022 மற்றும் 06.04.2023 ஆகிய நாட்களில் அமைச்சகத்தால் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. சூதாட்டம் மற்றும் பந்தயம் ஒரு சட்டவிரோத நடவடிக்கை என்றும், எனவே எந்தவொரு ஊடகத் தளத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அத்தகைய நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துவது மற்றும் ஊக்குவித்தல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரஸ் கவுன்சில் சட்டம் 1978 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு முரணானது.

மேலும், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் சமீபத்தில் திருத்தப்பட்ட விதி 3 (1) (பி), இடைத்தரகர்கள் தாங்களாகவே நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மேலும் அதன் கணினி வளத்தைப் பயன்படுத்துபவர்கள், விளையாட்டு பற்றிய எந்தவொரு தகவலையும் வழங்கவோ, அதனை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, திருத்தவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாது என்று கூறுகிறது.

Tags: central governmentonline gamemedia
Share
Tweet
SendShare
Previous Post

அமித்ஷாவுடன் மணிப்பூர் முதல்வர் சந்திப்பு!

Next Post

தெலங்கானாவில் ஆகஸ்ட் 27-ல் அமித்ஷா பிரசாரம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies