ம.பி.யில் அமைச்சரவை விரிவாக்கம்!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ம.பி.யில் அமைச்சரவை விரிவாக்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 26, 2023, 04:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 3 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தின் பதவிகாலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நவம்பர் மாதத்திற்குள் இம்மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டன. சமீபத்தில் மத்தியப் பிரதேசத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். புதிதாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை அமைச்சர்களாக நியமித்திருக்கிறார். அதன்படி, ராஜேந்திர சுக்லா, கௌரிசங்கர் பிசேன், ராகுல் லோதி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் மங்குபாய் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மத்தியப் பிரதேச அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் ராஜேந்திர சுக்லா முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ரெவா தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேபோல, கவுரிசங்கர் பிசேன் பாலகாட் தொகுதியில் இருந்து 7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேசமயம், ராகுல் லோதி முதல் முறையாக கார்காபூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Minister
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை இரயில் விபத்து : மீட்புப் பணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்!

Next Post

பில்லியன் டாலர் செயற்கைக்கோள் சந்தை: ஆதிக்கம் செலுத்துமா ? இந்தியா.

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies