தேசிய நல்ல ஆசிரியர் விருதிற்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் மாலதி ஆகிய இருவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 ஆசிரியர்களில், தமிழகத்திலிருந்து, மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்கள் இருவருக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் எதிர்காலமான மாணவர்களை, தலைசிறந்தவர்களாக உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள். தமிழகத்திலிருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக, இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.