மதுரை இரயில் விபத்தில், தப்பியோடிய சமையல் ஊழியர்கள் 2பேரை இரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து, தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா இரயில் இயக்கப்பட்டது. இந்த இரயிலில் ஒரு பெட்டியில் 63 பயணிகள் பயணம் செய்தனர். இந்த இரயில் பெட்டி கடந்த 25-ம் தேதி அதிகாலை மதுரை இரயில் நிலையத்தில் உள்ள போடி இரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. இதில் இரயிலில் இருந்த 9 பேர் உயிரோடு தீயில் கருகி பலியானார்கள். பலர் பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து இரயில்வே போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் இரயில்வேப் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், சமையல் கோச்சில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதனால், சமையல் கோச்சில் பயணம் செய்த ஊழியர்களை தேடி வந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் போலீசார் விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகி இருந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 2 சமையல் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீ விபத்து நடந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.