இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!
Sep 10, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!

Murugesan M by Murugesan M
Aug 28, 2023, 10:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை இரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும், சிறப்பு விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து, தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா இரயில் பெட்டியில் 63 பயணிகள் பயணம் செய்தனர். இந்த இரயில் பெட்டி கடந்த 25-ம் தேதி அதிகாலை மதுரை இரயில் நிலையத்தில் உள்ள போடி இரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ விபத்தில் சிக்கியது. இதில் 9 பேர் உயிரோடு தீயில் கருகி பலியானார்கள். பலர் பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து இரயில்வே போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் இரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களே, இரயிலில் சட்ட விரோதமாக, இரயில் பெட்டியில் சிலிண்டர், விறகு, அடுப்பு உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனால், ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த லக்னோ அடுத்துள்ள சித்தாபூரில் உள்ள பாசில் என்ற டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தீ விபத்துக்குக் காரணமான 2 சமையல் ஊழியர்களை கைது செய்தனர்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ. 3லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல், மதுரை அரசு மருத்துவனையில் உடற்கூராய்வு நடத்திய பின்னர், அவர்களது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து சிறப்பு விமானத்தில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதேபோல், உயிர் தப்பிய பயணிகள் அனைவரும் சொந்த ஊருக்குச் செல்லும் வகையில், சிறப்பு விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Tags: Air india
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை இரயில் விபத்து – தப்பியோடிய 2 பேர் கைது – சிக்கியது எப்படி?

Next Post

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றடைந்த 4 வீரர்கள்!

Related News

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies