தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் அன்றைக்குத் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தாண்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி இருவரும் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆளுநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கல்வித் துறையில் அசாதாரண முயற்சி & பங்களிப்புக்காக தேசிய நல்லாசிரியர் விருது 2023-க்கு தேர்வான திருமதி எஸ்.மாலதி, அரசு மேல்நிலை பள்ளி, #வீரகேரளம்புதூர், டாக்டர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, #அலங்காநல்லூர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 27, 2023
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் பதிவில்,
“கல்வித் துறையில் அசாதாரண முயற்சி மற்றும் பங்களிப்புக்காக தேசிய நல்லாசிரியர் விருது 2023-க்கு தேர்வான எஸ்.மாலதி, அரசு மேல்நிலைப் பள்ளி, வீரகேரளம்புதூர், டாக்டர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய #நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் திரு.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி… pic.twitter.com/JFVkix7rC8
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 27, 2023
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் பதிவில்,
“சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் திரு. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி மாவட்டம் கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை திருமதி. மாலதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.