நாடு முழுவதும் ரக்சா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு, சிறுமிகள் ராக்கி கயிறு கட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரக்சா பந்தன் என்பது ஆவணி மாதம் பௌர்ணமி நாளில், நாடு முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும்.
பெண்கள் தாங்கள் சகோதரராகக் கருதும் நபர்களின் மணிக்கட்டில் மஞ்சள் கயிறு கட்டுவது வழக்கம். ஆண் இதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அந்தப் பெண்ணுக்கும், அவரது பாதுகாப்புக்கும் அவர் உறுதுணயாக இருக்கிறார் என அர்த்தம்.
அந்த வகையில், இந்த வழக்கம், தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. ராக்கி கயிறு கட்டிய உடனே, அந்த சகோதரிக்கு, அந்த சசோதரன், பரிசு வழங்குவது முறை. நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் மீதான நம்பிக்கை மற்றும் கௌரவத்தின் வெளிப்பாடாக, கோல்டன் கட்டார் டிவிசனில், ஜாம் நகர் 31 -ல் (GoldenKatarDivision Jamnagar 31) ராணுவ வீரர்களுக்கு, சிறுமிகள் ராக்கி கயிறு கட்டி, ரக்சா பந்தன் விழாவைக் கொண்டாடினர். சிறுமிகளின் செயலால், வீரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.