டாக்டர் பட்டம் பெற்றார் "ஹிப்ஹாப் தமிழா" ஆதி!
Sep 5, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாக்டர் பட்டம் பெற்றார் “ஹிப்ஹாப் தமிழா” ஆதி!

Murugesan M by Murugesan M
Sep 1, 2023, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்

ஐந்து ஆண்டுகள் ஆய்வு ஹிப்ஹாப் தமிழா ஆதி தனியிசைக் கலைஞராக ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். பின்னர் அவர் இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மையோடு தமிழ்ச் சினிமாவில் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார்.

இவர் ‘ஆம்பள’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை-2’, ‘கதகளி’, ‘கத்தி சண்டை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோமாளி’, ‘ஆக்ஷன்’ உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார்.

இதனிடையே, ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ (Musical Entrepreneurship) என்பதை மையமாக வைத்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதி பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்தார்.

பல புதிய தனியிசைக் கலைஞர்களைத் திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தி வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, “தனது ஆராய்ச்சி இசையை வாழ்க்கையாக கொண்டோருக்கு உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது” எனக் தெரிவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் (24-08-2023) நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார்.

இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியதாவது: “இசையில் தொழில்முனைவு பிரிவில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஆய்வை நிறைவு செய்தேன். அந்த வகையில் இன்று, பட்டமளிப்பு விழாவில் அதற்கான பட்டத்தை பெற்றுக் கொண்டேன். வேறு பணிகளை செய்து கொண்டே ஆய்வு செய்தது சற்று கடினமாக இருந்தது.

அடுத்ததாக பி.டி. சார் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் என்று நினைக்கிறேன்”  என அவர் தெரிவித்தார்.

Tags: hiphop tamizha
Share
Tweet
SendShare
Previous Post

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்திடம் போராடி வென்ற இலங்கை!

Next Post

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

Related News

சென்னை – கும்பகோணம் நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies