தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தளில் இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சொங் பாங் (Chong Pang), மார்சிலிங்கில் (Marsiling) உள்ள வாக்குச்சாவடி நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இயந்திரக் கோளாறைச் சரிசெய்யும் வரை சொங் பாங்கில் மக்கள் வரிசையில் காத்திருந்து அரை மணி நேரம் கழித்து வாக்களித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மற்ற பல இடங்களில் வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் 7-வது அதிபர் தேர்தலான இந்த தேர்தலில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபருக்கான களத்தில் உள்ளனர். என்றாலும் தமிழரான தர்மன் சண்முகரத்னமே அதிபராக வெற்றிப்பெறுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.