அமெரிக்காவில் இந்திய நகைக் கடைகளில் கொள்ளை!
Sep 13, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய நகைக் கடைகளில் கொள்ளை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 1, 2023, 08:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் நான்கு  கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் ஒரு வருட காலமாக இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் நகைக் கடைகளைக் குறிவைத்து பயங்கர ஆயுதங்களைக் கொண்ட கும்பல்  கொள்ளையடித்து வந்தது.

இந்தக் கடைகளில் பெரும்பாலும் கடையை நடத்துபவரின் குடும்பத்தினரே ஊழியர்களாகப் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்களால் குறிவைக்கப்பட்ட 9 தெற்காசிய நகைக் கடைகளில், 4 கடைகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது.

ஜனவரி 7, 2022-இல் இருந்து ஜனவரி 27, 2023 வரையிலான மாதங்களில் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வர்ஜீனியா மற்றும் புளோரிடாவில் ஆசிய அமெரிக்கர்களுக்குச் சொந்தமான நகைக் கடைகளில் இந்தக் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது. பெரும்பாலும் சிறு வணிகர்களைக் குறிவைத்து, பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தனர்.

கருப்பு ஆடையுடன் கையுறைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து மாறுவேடமிட்ட இந்தக் கும்பல், துப்பாக்கிகள் ஏந்தியபடிக் கொள்ளையடித்து இக்கும்பல் கொள்ளைக்கு பிறகு தப்பிச்செல்ல  எப்போதும் திருடப்பட்ட வாகனங்களையே பயன்படுத்தியது.

பல மாநிலங்களில் குற்றங்கள் நடந்ததால், மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்த  நடவடிக்கைகள் மூலம் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நீண்ட விசாரணைக்குப் பின், தடயங்களை வைத்து, இக்குற்றங்களில்  ஈடுபட்டதாக 16 நபர்களைக் கைது செய்தனர். இக்குற்றங்களில்  தொடர்புடைய ஒருவர் வீட்டில் இருந்து துப்பாக்கிகளும், ரூ.2.5 கோடி மதிப்பிலான ரொக்கப் பணமும்  கைப்பற்றப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்டவர்கள் மீது 19 குற்றச்சாட்டுகளுடன், ஹாப்ஸ் சட்டம் எனப்படும் “மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகத்தில் தலையிட சதி செய்தல்” என்னும் பிரிவிலும் வழக்குகள் பதிவுச்  செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 20 வருடங்களுக்கும் மேலான சிறை தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் கொள்ளைக்  கும்பலை விரைவில் பிடித்து கைது செய்தற்காக காவல் துறையினரை மக்கள் பாராட்டி வருகின்றன.

Tags: Indiaamericagoldtheft
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த இலக்கு ககன்யான் திட்டம்!-இஸ்ரோ தலைவர் சோமநாத்.

Next Post

ரூ.2000 நோட்டுகள் 93 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளது-ரிசர்வ் வங்கி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies