செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 02:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமலாக்கத்துறையால் கைதுச் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைச் சிறப்பு நீதிமன்ற அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முதலில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், மேற்கண்ட வழக்கு சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு என்பதால், அந்த மனுவை விசாரிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.

உடனே செந்தில் பாலாஜி, முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடிநாடினார். ஆனால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, சிறப்பு நீதிமன்றத்தையே நாடுமாறு அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை நாடினர். அதற்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதியோ, அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆகவே, உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டு வாருங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக நீதிபதி சக்திவேல் செப்டம்பர் 02ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? என்பது குறித்து முடிவு செய்ய நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 78 நாட்களாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் அவர்மீதான விசாரணை கடந்து விட்டதாகவும், மறு விசாரணைத் தேவையல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில், ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

மத்திய வருவாய் மற்றும் நிதித்துறை அறிக்கையில் பிரிவு 43ன் படி சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்க மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டு முதல் தற்போது 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

சிறப்பு நீதிமன்றங்களில் 1 மற்றும் 2 நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றத்துக்கான அதிகாரமும், 3வது நீதிமன்றம் நடுவர் நீதிமன்றத்துக்கான அதிகாரத்துடன் செயல்படுகிறது. அரியலூர், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இயங்கும் மாவட்ட நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படுகின்றன.

சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டம் 4ன் படி தண்டனைக்கு உரிய குற்றத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவுச் செய்துள்ளது. அதன்படி, பிரிவு 43(1)ன்படி சிறப்பு அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க முழு அதிகாரம் உள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: it raids senthil balaji
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரோ இயக்குனரான தமிழ பெண் !

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா – கொடியேற்றம். 

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies