6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்
Aug 8, 2026, 12:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 6, 2023, 11:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தற்போது, இந்த தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு விவரங்களைத் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவால், அவர் போட்டியிட்ட புதுப்பள்ளி தொகுதி காலியானதானது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற தொகுதிகளில் உள்ள உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது. இதனால், 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.

இதனிடையே, இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், செப்டம்பர் 5-ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் செப்டம்பர் 8-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில், திரிபுரா மாநிலத்தில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும், ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்களித்த அனைவரது கை விரல்களிலும், அழியா மை வைக்கப்பட்டது. பிரச்சனை மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும், மூடி சீலிடப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பதிவான வாக்குப் பதிவு சதவிதம் குறித்து தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம் கோசி தொகுதியில் 50.30 சதவீதமும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் டும்ரி தொகுதியில் 64.84 சதவீதமும், உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ் தொகுதியில் 55.44 சதவீதமும், மேற்கு வங்கம் மாநிலம் துப்குரி தொகுதியில் 76 சதவீதமும், கேளராவில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 73 சதவீதமும், திரிபுரா மாநிலத்தில் உள்ள தன்புர் மற்றும் போக்ஸாநகர் தொகுதியில் 76 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags: bye electionindia bye
Share
Tweet
SendShare
Previous Post

உதயநிதி மீது கிரிமினல் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி .

Next Post

பாரத மண்டபத்தில் பிரமாண்டமான நடராஜர் சிலை!

Related News

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies