ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!
Jul 28, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!

Murugesan M by Murugesan M
Sep 9, 2023, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியா தலைமை தாங்கி இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக ஜி-20 மாநாட்டுக்கு வருகைதந்த ஆப்பிரிக்க யூனியனின் பிரதிநிதியை பிரதமர் நரேந்திர மோடி ஆரத் தழுவி பாரத் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றது கவனம் பெற்றது.

மேலும் மாநாட்டுக்கு வந்த உலகத் தலைவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று அரங்குக்கு அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து மாநாட்டில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனை இணைக்கும் நிகழ்வு நடந்தது.

ஆப்பிரிக்க யூனியனில் 55 நாடுகள் உள்ள நிலையில் ஆப்பிரிக்க யூனியனை இணைத்ததால் ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக ஜி-20 கூட்டமைப்பு மிகப் பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது.

மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கை முன்னர் பாரத் என்று பெயர்ப் பலகை இருந்தது கவனத்தை ஈர்த்தது.

Tags: PM ModiG20
ShareTweetSendShare
Previous Post

வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் : பிரதமர் மோடி உரை!

Next Post

100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திமுக தடுத்துவிட்டது – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

Related News

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies