வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் : பிரதமர் மோடி உரை!
Sep 13, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் : பிரதமர் மோடி உரை!

Murugesan M by Murugesan M
Sep 9, 2023, 03:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவிட்-19 பெரும் தொற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக அதனை முறியடித்த நாம் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையையும் வெற்றிகரமாக மாற்ற முடியும் என ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இன்று நடந்த முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் முன்னால் நாட்டினைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் பாரத் என்று எழுதப்பட்டிருந்தது.

ஜி-20 மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து மாநாட்டின் மையக்கருத்தான “வசுதைவ குடும்பகம்” எனும் சித்தாந்தத்தின் ஒரு அம்சமாக “ஒரே பூமி” அமர்வில் கலந்து கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஆப்போது உரையாற்றியவர்,

இந்த மாநாடு இந்திய மக்களுக்கான மாநாடாகவே மாறியுள்ளது.  அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்தியாவின் கொள்கையாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலகளவில் எடுத்து செல்ல வேண்டும்.

வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை காண வேண்டும். பல வருடங்களாக தீர்வு காணப்படாத நாட்பட்ட சவால்களுக்கு நாம் புதிய வழிமுறைகளில் தீர்வு காண வேண்டும். உலக நாடுகளிடையே பரஸ்பர அவநம்பிக்கை தோன்றியுள்ள சூழ்நிலையை மாற்றி நம்பிக்கையுள்ள நட்பு நாடுகளாக நாம் மாற வேண்டும். கோவிட்-19 பெரும் தொற்றிற்கு பிறகு உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தும் நம்பிக்கையும் குறைந்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நாடுகளுக்கிடையேயான போர், அந்நிலையை மேலும் நலிவடைய செய்துவிட்டது

இருப்பினும், கோவிட்-19 பெரும் தொற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக அதனை முறியடித்த நாம் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையையும் வெற்றிகரமாக மாற்ற முடியும்.

உலக நன்மையையே பொதுவான குறிகோளாக மாற்றி நாம் அனைவரும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும். இன்று ஜி20 மாநாட்டின் தலைமையாக அமர்ந்திருக்கும் இந்தியாவின் சார்பாக நான், உலக நாடுகள் அனைத்தையும் நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதையே குறிக்கோளாக கொள்ளும்படி அழைக்கிறேன்.

இந்நேரத்தில் மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இக்கட்டான இந்த சமயத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர ஜி-20 உறுப்பினராக்க இந்தியா முன் வருகிறது. இந்த முன்மொழிவுக்கு அனைத்து உறுப்பினர்களும் உடன்படுவார்கள் என நான் நம்புகிறேன். உச்சி மாநாட்டில் உலக தலைவர்களின் உற்சாக கரகோசத்துக்கிடையே உங்கள் அனைவரின் ஆதரவுடன் ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 யில் நிரந்தரமாக சேர அழைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார். கடைசியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரவேற்றுச் சென்றார். காலம், முன்னேற்றம், தொடர்ச்சி ஆகியவைகளைக் குறிக்கும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோனார்க் சின்னத்தின் பிரதி முன்பாக நின்று பிரதமர் உலகத் தலைவர்களை வரவேற்றார்.

 

Tags: pm modi latest speech
Share
Tweet
SendShare
Previous Post

ஜி20 உச்சிமாநாடு: உலகில் மிகப் பெரிய மணல் சிற்பம்!

Next Post

ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies