பிரதமர் மோடிக்கு மொராக்கோ தூதர் நன்றி!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு மொராக்கோ தூதர் நன்றி!

நிலநடுக்க பாதிப்புக்கு நிதியுதவி வழங்க உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 13, 2023, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோ நாட்டுக்கு, நிதியுதவி மற்றும் பொருளுதவி அளிக்க முன்வந்திருக்கும் இந்தியாவுக்கு, அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு 11.11 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தில் மாரகேஷ் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் இதுவரை 2,800-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் நடந்த மறுநாள், இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது. இம்மாநாட்டு தொடங்குவதற்கு முன்பாகப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த சவாலான காலக்கட்டத்தில் மொராக்கோவுக்கு உலகளாவிய சமூகத்தின் அசைக்க முடியாத ஆதரவு உள்ளது. மேலும், மொராக்கோ நாட்டுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தகுதி வாய்ந்த அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டு, தேவைகளை மதிப்பீடு செய்து வருகின்றனர். உயிர்களைக் காப்பாற்றுவதும், பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் சாலைகளைச் சீரமைப்பதும் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இதுபோன்ற இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் திறன் மொராக்கோவுக்கு உள்ளது. இருப்பினும், சகோதர மற்றும் நட்பு நாடுகளின் உதவி எப்போது, ​​​​எங்கே தேவைப்படும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா போன்ற பல சகோதர மற்றும் நட்பு நாடுகள் மொராக்கோவுக்கு தங்களது உதவியை வழங்கத் தயாராக உள்ளன” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் உதவிக்கு மொராக்கோ தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, இந்தியாவுக்கான மொராக்கோவின் தூதர் முகமது மாலிகி கூறுகையில், “கடந்த 8-ம் தேதி எமது தாயகத்தைத் தாக்கிய பேரழிவுகரமான பூகம்பத்தைத் தொடர்ந்து, மொராக்கோவுக்கு தனது உதவியை வழங்க இந்தியா கருணையுடன் முன்மொழிந்தது. இந்த சைகை மிகவும் பாராட்டப்பட்டது. இது 2 நட்பு நாடுகளுக்கு இடையே மகிழ்ச்சியுடன் இருக்கும் நட்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. இந்த இயற்கை பேரிடர் நாட்டை தாக்கிய முதல் மணி நேரத்திலிருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து காட்டப்படும் ஒற்றுமையின் வெளிப்பாட்டை மொராக்கோ உண்மையிலேயே பாராட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiMorroccoambassadorThanks
Share
Tweet
SendShare
Previous Post

4,000 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

Next Post

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies