மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 20, 2023, 10:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றம்  மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, 30 ஆண்டுகளுக்கு மேலான இழுபறிக்குப் பின், தற்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான மசோதா, நடப்பு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமானாலும், அடுத்து வரும் ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல் அல்லது மக்களவை தேர்தலில் நடைமுறைக்கு வராது. தற்போதைய சூழ்நிலையில், 2029-ல்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில்  நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறு பக்கங்கள் உள்ள, 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கான நேரடி தேர்தல்களில், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்

அதே நேரத்தில் மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைகளுக்கு இது பொருந்தாது.

இந்த இட ஒதுக்கீட்டில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மூன்றில் ஒரு பங்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும்.

கடந்த, 2010-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இடம்பெற்றிருந்த, ஆங்கிலோ — இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு, தற்போதைய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது.

மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், ஒவ்வொரு தொகுதி மறுவரையின்போதும், சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும்

மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். அதன்பின், மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும்.

கடந்த 2002-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 82வது பிரிவு திருத்தப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை, 2026-க்குப் பின் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இதன்படி பார்த்தால், 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே, இடஒதுக்கீடு அமலுக்கு வர வேண்டும்.

ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 2027ல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்.

அதன்பின், தொகுதி மறுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2029ல் இருந்து, மகளிர் இடஒதுக்கீடு, நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

Tags: PM ModiPARLIMENT SPECIAL SESSIONwomen bill
Share
Tweet
SendShare
Previous Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ஜெயஸ்ரீ உல்லால்!

Next Post

உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம்! – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies