மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி நன்றி!
Sep 13, 2026, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி நன்றி!

மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 03:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களின் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும் என்றார்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்ததற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

பின்னர், இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இது இந்தியாவின் நாடாளுமன்றப் பயணத்தின் பொன்னான தருணம். இந்த சபையின் அனைத்து உறுப்பினர்களும், இந்த பொன்னான தருணத்திற்கு தகுதியானவர்கள். மேலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றி கடைசி மைல் கல்லைக் கடக்கும்போது, ​​நாட்டிலுள்ள பெண்களின் முகத்தில் மாற்றம் மற்றும் புதிய நம்பிக்கை தோன்றும். இது கற்பனை செய்ய முடியாத சக்தியாக வெளிப்படும். நாடு புதிய உயரத்தை எட்டியுள்ளது. இதை என்னால் உணர முடிகிறது” என்று கூறினார்.

இதனிடையே, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார் . அப்போது பேசிய அவர், “இன்று நான் கொண்டு வந்திருக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவின் மூலம், மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். இது ஒரு முக்கிய படியாகும்” என்று கூறினார்.

இம்மசோதா ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ என்று அழைக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு சிறப்புக் கூட்டத் தொடர் மாற்றப்பட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, “நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்பது ஒரு வரலாற்றுச் சட்டமாகும். இது பெண்களின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும். மேலும் நமது அரசியல் செயல்பாட்டில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. சிறப்புக் கூட்டத் தொடர் நாளை நிறைவடையும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்றோ அல்லது நாளையோ நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM Modipassespraises mpswomens quota bill
Share
Tweet
SendShare
Previous Post

திருமலையில் 36 மணி நேரம் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை!

Next Post

தங்கம் வெல்வோம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies