மாபெரும் தூய்மைப்பணி: மத்திய அரசு அழைப்பு
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாபெரும் தூய்மைப்பணி: மத்திய அரசு அழைப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 25, 2023, 02:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அக்டோபர் 1-ந் தேதி நாடு முழுவதும் நடைபெறும் மெகா தூய்மைப் பணியில் பொதுமக்கள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி பொது இடங்களில் தூய்மைப்பணிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, ‘சுகாதார சேவை’ என்ற பெயரில், நாடு முழுவதும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. இது அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த மெகா தூய்மைப்பணியில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் பங்கேற்குமாறு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மைப் பணி நடைபெறும்.

நாடு முழுவதும் உள்ள சந்தை பகுதிகள், இரயில் நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும். இதில், நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், சிவில் விமான போக்குவரத்து, இரயில்வே, தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசுத் துறைகள், பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப்பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் ஆகியவை இவற்றை நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: PM Modigovernment of indiaswatch bharath
Share
Tweet
SendShare
Previous Post

10 புலிகள் உயிரிழப்பு: தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரணை!

Next Post

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies