அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
Sep 13, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் விவாதித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 22-ம் தேதி அந்நாட்டுக்குச் சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியவர், இந்தியா ஹவுஸில் வணிகம், நிர்வாகம் மற்றும் சிந்தனைக் குழுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் “எங்கள் வழக்கமான உரையாடல்கள் இந்தியா-அமெரிக்க உறவை வலுவாக வைத்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாயை சந்தித்த ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார். அதேபோல, அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனையும் சந்தித்து, இந்தாண்டு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை அங்கீகரித்தோடு, அதை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர்.

இது தவிர, உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு பற்றி சந்தனையாளர்கள் குழுவுடனான உரையாடலில் பங்கேற்றார். கடந்த 26-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். நாளை, வாழும் கலை அமைப்பினால் நடத்தப்படும் 4-வது உலக கலாச்சார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் ஜெய்சங்கர், நாடு திரும்புகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதித்தார். மேலும், ஜி20 இந்தியாவின் தலைமைப் பதவியின் முக்கிய முடிவுகள் குறித்தும் விவாதித்தனர். அதேபோல, வரவிருக்கும் 2+2 உரையாடலுக்கு முன்னதாக, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பின் தொடர் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

Tags: americaMinister jaishankar
Share
Tweet
SendShare
Previous Post

மசூதி அருகே இரட்டை குண்டுவெடிப்பு! 54 பேர் பலி!

Next Post

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies