இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!
Sep 13, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை அரசின் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவண ராஜா அந்நாட்டைவிட்டு வெளியேறி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ரீ.சரவண ராஜா. இவர் குருந்தூர்மழை தொடர்பான வழக்கில் முக்கியக் கட்டளைகளை பிறப்பித்து தீர்ப்பளித்திருந்தார். ஆனால், நீதிபதி வழக்கிய கட்டளைகளை மாற்றி அமைக்குமாறு அரசுத் தரப்பில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் இருந்தும் தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதையடுத்து, தான் வகித்து வந்த நீதிபதி பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு, அந்நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் நீதிபதி ரீ.சரவண ராஜா.

இது தொடர்பாக நீதிபதி சரவண ராஜா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றி அமைக்குமாறு அரசுத் தரப்பால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.

மேலும், எனக்கான காவல்துறை பாதுகாப்பும் அண்மையில் குறைக்கப்பட்டது. அதோடு, உளவுப் பிரிவினரும், புலனாய்வாளர்களும் என்னை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். இலங்கை அதிபரோ, கடந்த 21-ம் தேதி என்னை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றி அமைக்கும்படி அழுத்தம் கொடுத்தார். குருந்தூர்மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில், எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு 2 வழக்குகள் தொடரப்பட்டன.

ஆகவே, எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதி பதவிகள் உட்பட அனைத்தையும் துறந்து விட்டேன். இதுகுறித்த எனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23-ம் தேதியன்று பதிவுத் தபால் மூலம் நீதிச்சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும், அவரது பதவி விலகல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இலங்கை நாட்டை விட்டு வெளியேறி விட்டது தெரியவந்திருக்கிறது.

Tags: srilankaJudge
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

Next Post

அருணாச்சல் மீது சீனாவுக்கு உரிமை இல்லை: பெமா காண்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies