மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

மத்திய அரசிதழிலும் வெளியீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், இம்மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசில் 6 முறை கொண்டு வரப்பட்டும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து இம்மசோதாவை நிறைவேற்ற விடவில்லை. இதனால், கடந்த 27 வருடங்களாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. குறிப்பாக, புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் மசோதாவாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இருக்க வேண்டும் என்று விரும்பினர். எனவே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் முடிந்து மறுநாள் புதிய நாடாளுமன்றத்துக்கு கூட்டம் இடம்பெயர்ந்தது. அப்போது, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இம்மசோதாவுக்கு ஆதரவாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மசோதா பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது. இதையடுத்து,  கடந்த 21-ம் தேதி மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 11மணி நேரம் விவாதத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இம்மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் 215 உறுப்பினர்களின் ஆதரவுடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் மாநிலங்களவைத் தலைவரும் ,துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டிருந்தார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இம்மசோதா சட்டமாக்கப்பட்டு, மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Tags: PresidentWoman Reservation BillSign
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!

Next Post

தொடர் விடுமுறை: கடும் போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies