காந்தி ஜெயந்தி: தூய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.க. இலவச வேட்டி, சேலை!
Sep 12, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தி ஜெயந்தி: தூய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.க. இலவச வேட்டி, சேலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆயிரம் விளக்குத் தொகுதியான நுங்கம்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை தமிழக பா.ஜ.க. இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வழங்கினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 1-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் மெகா தூய்மை இயக்கத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பா.ஜ.க. தலைவர்கள் தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனர். அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் தூய்மை இயக்கத்தில் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதியான இன்று காலை 9 மணி அளவில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில், தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கே.விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். ஆயிரம் விளக்கு தொகுதியான தெற்கு மண்டல் 110-வது வட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் ராமலிங்கம் கோவில் அருகில் ராஜாஜி வீதியில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து, அடையாரில் உள்ள காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: Tamil NadubjpCleaning workersDhotisSarees
Share
Tweet
SendShare
Previous Post

1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!

Next Post

வந்தே பாரத் இரயில்கள்: 14 நிமிடத்தில் இந்திய இரயில்வே சாதனை

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies