பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?
Sep 27, 2026, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டாசுக் கடை வெடி விபத்தில் 14 பேர் பலி – அத்திப்பள்ளியில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் திடீரென ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடிவிபத்தில், 14 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, நவீன்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கடை உள்ளது. அதில், தீபாவளி பண்டிகையையொட்டி,
பட்டாசு விற்பனை செய்ய கடை அமைத்து வந்தனர். இதில், வாணியம்பாடி, அரூர் டி. அம்மாபேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று கடைக்கு ஒரு கன்டெய்னர் லாரி மற்றும் இரு சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு வரப்பட்டன. அதனைத் தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதில், தீப்பொறி கடைக்குள் விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துத் தீப்பிடித்து எரிந்தன. காற்றில் தீ மளமளவென சரக்கு வாகனங்களிலிருந்த பட்டாசுகளுக்கும் பரவியது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், 2 பேர் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டது. தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த சச்சின் மற்றும் வேடியப்பன் ஆகியோர் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்த விபத்தில், கடை உரிமையாளர் நவீன உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் ஒரு ஒரு கன்டெய்னர் லாரி, 3 சரக்கு வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கடை நடத்த உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அல்லது விதி மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Fire accident14 killed in fire cracker shop blast
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

Next Post

கோவை: உயிர் தப்பிய 50 கல்லூரி மாணவர்கள் – நடந்தது என்ன?

Related News

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

புரட்டாசி மாத சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை – அக்டோபர் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies