செம்பரம்பாக்கம் ஏரி கரையோர மக்களுக்கு திடீர் எச்சரிக்கை - என்ன காரணம்?
Sep 27, 2026, 07:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி கரையோர மக்களுக்கு திடீர் எச்சரிக்கை – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதையொட்டி, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியானது காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் 25.51 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்டத்தின் மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். நேற்று (07.10.2023) நீர் இருப்பு 21.96 அடியாகவும், கொள்ளளவு 3110 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டும் நிலையில் உள்ளது. மேலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

இதனால், சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 10 மணி முதல் விநாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக, 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக சிறு களத்தூர், காவலர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாமல் ஏரியை, மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags: dam openSembarambakkam Lake
Share
Tweet
SendShare
Previous Post

கோவை: உயிர் தப்பிய 50 கல்லூரி மாணவர்கள் – நடந்தது என்ன?

Next Post

சீன உளவுக் கப்பல் இலங்கை வருகைக்கு அனுமதி மறுப்பு?!

Related News

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

புரட்டாசி மாத சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை – அக்டோபர் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies