டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Jun 14, 2026, 04:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 07:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே  ஆகஸ்ட் 11 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் அனுபவங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) துறையில், அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகப் பல நாடுகள் மற்றும் பலதரப்பு முகமைகளுடன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒத்துழைத்து வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முன்முயற்சிகளுடன் இணைந்து, நாட்டை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்ற இது உதவுகிறது.

Tags: PM Modicentral cabinet meeting
ShareTweetSendShare
Previous Post

டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது – அண்ணாமலை ஆவேசம்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies