தவத்திரு பங்காரு அடிகளாருக்கு ஆர்எஸ்எஸ் அஞ்சலி!
Aug 24, 2026, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவத்திரு பங்காரு அடிகளாருக்கு ஆர்எஸ்எஸ் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 03:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மீக அன்பர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என தென்பாரதத் தலைவர் ஆர்எஸ்எஸ் இரா.வன்னியராஜன் தெரிவித்துள்ளார்.

குழந்தைப் பருவம் முதலாகவே ஆன்மீக நீரோடையில் நீந்திய அடிகளார்,  தனது கடும் முயற்சிக்குப் பிறகு அன்னை ஆதிபராசக்திக்கு பீடம் ஏற்படுத்தி, அப்போது முதல் முழுநேரமாக ஆன்மீக சேவையை, உலகெங்கிலும் அன்னை ஆதிபராசக்தியின் மகிமைகளைக் கொண்டு  சேர்த்து வந்தார். உலகெங்கிலும் இருக்கின்ற அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கு, ஆன்மீக குருவாகவும், அன்பைப் பொழியும் அன்னையாகவும் திகழ்ந்தார்.

கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீகத் தேடலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். பாமரரின் இதயத்தில் அன்னையின் வடிவான சநாதன தர்மத்தைக் கொண்டு சேர்த்ததோடு, அவர்களின்பால் அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட அரும்பாடுபட்டார்.

ஏழை, எளிய மக்களுக்காக கல்வி நிலையம் துவங்கி கல்வி கண் திறந்தார். மருத்துவம் பார்க்க இயலாதவர்களுக்கு மருத்துவமனை துவங்கி பெருஞ்சேவை புரிந்தார்.

ஆன்மீகப் புரட்சியாக, பெண்கள் கருவறைக்குள் செல்ல இயலாது என்ற கூற்றை பொய்யாக்கியதோடு, பெண்களையே அம்மனுக்கு பூஜை செய்ய வைத்து சாதனை நிகழ்த்தினார்.

இப்படி எண்ணிலடங்கா சேவையாற்றிய பெரியவர் அடிகளாரின் மறைவு, ஆன்மீக அன்பர்களுக்கும், அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் சேவையை கௌரவித்து மத்திய அரசாங்கம் ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அடிகளார் செய்த ஆன்மீக, மருத்துவ, கல்விச் சேவை என்றும் அவர் புகழ்பாடும். அடிகளாரை இழந்த அன்னையின் பக்தர்களுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் எமது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் சாந்தி.

Tags: RSS
Share
Tweet
SendShare
Previous Post

பங்காரு அடிகளார் மறைவு! – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இரங்கல்.

Next Post

5 மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை இறுதி செய்ய பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டம்!

Related News

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies