கர்பா டான்ஸ்: மாரடைப்பால் 10 பேர் உயிரிழப்பு!
Oct 18, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்பா டான்ஸ்: மாரடைப்பால் 10 பேர் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நவராத்திரி விழாவையொட்டி, கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்கள் அனைவருமே இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் என்பதுதான் பேரதிர்ச்சி.

தற்போது நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா, பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 நாட்களுக்கு 9 சக்தி வடிவ தெய்வங்களை வைத்து வழிபாடு நடத்துவார்கள். அதேபோல, இவ்விழாவின்போது, துர்கா தேவியை பாடுபொருளாகக் கொண்ட கர்பா பாடல்கள் இசைக்கப்படும்.

இந்த இசைக்கேற்ப ஆண்களும், பெண்களும் பாரம்பரிய உடை அணிந்து விடியும் வரை கர்பா நடனம் ஆடுவார்கள். அந்த வகையில், குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் சோகம் என்னவென்றால், உயிரிழந்த 10 பேரும் இளவயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என்பதுதான். பரோடாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோர் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோதே திடீரென சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார்கள். இதேபோல், மாநிலம் முழுவதும் மேலும் 8 உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன.

மேலும், நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்திருக்கின்றன. இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று குஜராத் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் இளவயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: GujratGarba Dancenavratri10 dead
Share
Tweet
SendShare
Previous Post

மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் – காரணம் என்ன ?

Next Post

கடைசி ஏழை இருக்கும்வரை ஓய்வெடுக்கப்போவதில்லை: பிரதமர் மோடி!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies