கை இல்லாமல் 3 பதக்கங்களை வென்ற ஷீத்தல் தேவி : யார் இவர் ?
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கை இல்லாமல் 3 பதக்கங்களை வென்ற ஷீத்தல் தேவி : யார் இவர் ?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடந்து முடிந்த பாரா ஆசியா விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை பிரிவில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று 3 பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி யார் ?

பிறந்தத்திலிருந்தே 2 கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையோடுப் போராடி பதக்கங்களை வென்ற இந்த வீராங்கனையை பற்றி பார்ப்போம்.

ஜம்மு , காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள லோய்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷீத்தல் தேவி. இவர் கைகள் இல்லையே என்று கவலைப்படுவதை விட கால்கள் இருக்கிறதே என்று நினைத்து சந்தோஷப்படுவதுடன் அதை வைத்து சாதிக்கலாம் எனவும் முடிவும் செய்தார். இவரது எண்ணத்திற்கு பெற்றோர்களும்,நண்பர்களும்,கிராம மக்களும் உறுதுணையாக இருந்தனர்.

விளையாட்டுத்தான் தன்னை உயர்த்தும் என்று முடிவெடுத்து கட்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி ஆலய விளையாட்டு வாரியத்தில் சேர்ந்தார்.

அங்கு தன்னை வில்வித்தை போட்டிக்கு தயார் செய்யும்படி கூறியுள்ளார்,வில்வித்தை என்பது திறமை, துல்லியம், பார்வை, செறிவு மற்றும் நல்ல கட்டுப்பாடு தேவைப்படும் ஒரு விளையாட்டு ஆகவே பயிற்சியாளர்கள் இரு கைகளும் இல்லாத ஒருவருக்கு எப்படி வில்வித்தையில் பயிற்சிதருவது என்பது தெரியாமல் குழம்பிப்போயினர்.

அதற்கு ஷீத்தல் தேவியே சில வெளிநாட்டு ஊனமுற்ற வில்வித்தை வீரர்களின் வீடியோக்களைப் போட்டுக் காண்பித்து தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இவரது உறுதியைப் பார்த்து பயிற்சியாளர்களும் இறங்கிவந்து பயிற்சி தந்தனர்,ஆரம்பத்தில் இவரால் கால்களால் வில்லை துாக்கவே முடியாமல் இருந்தது, வேறு விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொள்கிறாயா எனக்கேட்ட போது இல்லையில்லை வில்வித்தைதான் என் தேர்வு என்று மீண்டும் மீண்டும் பயிற்சி எடுத்து அதில் தேர்வு பெற்றார்.
ஒரு நாளைக்கு ஐம்பது அம்புகளை குறிபார்த்து எய்து பயிற்சி பெற்றாலே வீரர்கள் சோர்வடைந்து விடுவர் ஆனால் தேவியோ முன்னுாறு அம்புகள் எய்துவிட்டும் சோர்வடையாமல் நிலைத்து நின்றார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, தேவி சோனிபட்டில் நடந்த பாரா ஓபன் நேஷனல்ஸில் வெள்ளி வென்றார் மற்றும் ஓபன் நேஷனல்ஸில் திறமையான வில்வீரர்களுக்கு எதிராகப் போட்டியிடும் போது நான்காவது இடத்தைப் பிடித்தார்.

அதன்பிறகு வெற்றியை நோக்கியே பயணிக்க ஆரம்பித்தவர் இன்று உடல் ஊனமுற்றவர்கள் பெறும் உயர்ந்த விருதான பாரா ஒலிம்பிக் விருதினை பெற்றுள்ளார்.

தனக்கு கை இல்லையென்றாலும் தன்னம்பிக்கையை தன்னுடைய நம்பகமான கையாக கொண்டு விளையாட்டில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றிப் பெற்ற வீராங்கனையை வாழ்த்துவோம்.

Tags: sportsnews
Share
Tweet
SendShare
Previous Post

அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்… டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!

Next Post

ஒகேனக்கல்: காட்டு யானை சுட்டுக்கொலை – வேட்டை கும்பல் அட்டூழியம்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies