பேட்டிங்கில் அசத்திய இந்தியா : இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு !
Sep 12, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேட்டிங்கில் அசத்திய இந்தியா : இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 07:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா முதல் பந்தில் 4 அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி, சுப்மன் கில்லுடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்தார். இருவரும் பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்களாக இலங்கை பந்தை தெறிக்கவிட்டனர்.

இருவரின் பார்ட்னெர்ஷிப்பால் 100 ரன்களை கடந்தது. அப்போது 30 வது ஓவரில் சுப்மன் கில் 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 92 பந்துகளில் 92 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக 31 வது ஓவரில் விராட் கோலி 11 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 94 பந்துகளில் 88 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல். ராகுல் 2 பௌண்டரிஸுடன் 19 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இவரையடுத்து சூரியகுமார் யாதவ் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வர் என்று எதிர்பார்க்க நிலையில் 2 பௌண்டரியசுடன் 9 பந்துகளில் 12 ரன்களை எதுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா ஸ்ரேயாஸ் ஐயருடன் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் குறைந்த பந்திலேயே அரைசதம் எடுத்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் சதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 56 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 300 ரன்களை கடந்துள்ளது என்றே சொல்லலாம். ஸ்ரேயாஸ் ஐயர் 6 சிக்சர்கள் மற்றும் 3 பௌண்டரீஸ் அடித்து மும்பை மைதானத்தையே அதிரவிட்டுளார் என்றே சொல்லலாம்.

அடுத்ததாக விளையாடி வந்த ஜடேஜா ஒரு பௌண்டரிய மற்றும் ஒரு சிக்சர் அடித்து மொத்தமாக 24 பந்துகளில் 35 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்துள்ளது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்களும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதனால் இலங்கை அணி வெற்றி பெற 358 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: India VS Srilankaicc world cup cricket
Share
Tweet
SendShare
Previous Post

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர்!

Next Post

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies