முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 05:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வரும் முகேஷ் அம்பானிக்கு, இ மெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் விடுத்த தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி. பிரபல தொழிலதிபரான இவர், உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராகவும் வலம் வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபரிடமிருந்து இ மெயில் வந்தது. அந்த இ மெயிலில், “எனக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்” என்று கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இதுகுறித்து தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீஸில் புகார் செய்தார். இதன்பேரில் மும்பை காம்தேவி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, முகேஷ் அம்பானிக்கு மீண்டும் இ மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.

அந்த மெயிலில் “நான் 20 கோடி ரூபாய்தான் கேட்டேன். ஆனால், நீங்கள் எனக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே, தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு இனி 200 கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறியிருந்தார். இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, மூன்றாவதாக 400 கோடி ரூபாய் கேட்டு மீண்டும் இ மெயில் வந்தது. இதைத் தொடர்ந்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதேபோல, மும்பை காம்தேவி காவல் நிலைய போலீஸாரும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெலங்கானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில், தொடர்ந்து 5 முறை முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 8-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நபர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Tags: ArrestMukesh AmbaniDeath threadYourthTelangan
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியல் ( 04/11/2023 )

Next Post

இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு !

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies