வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை!
Sep 27, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை!

திட்டங்களின் பயனாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வகையில் இந்த யாத்திரை அமையும்! - எல் முருகன்

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 07:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை தொடர்பான நிகழ்ச்சியை கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திரடி மோடி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரையை இன்று தொடங்கி வைத்தார்.  இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், நடைபெற்ற இந்த யாத்திரை (‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’) தொடர்பான நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு,  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கோத்தகிரியைச் சேர்ந்த, 17 விவசாயிகளுக்கு, மத்திய அரசின் விவசாய பயிர் கடனுக்கான காசோலைகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார். அதைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்கான மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் விழிப்புணர்வுக் கையேடுகளை அவர் வெளியிட்டார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஷேக் மீரா, நபார்டு வங்கி அதிகாரிகள், வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது ஜார்க்கண்டில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விவசாயிகளுக்கு சிறுதானிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, மாணவர்களின் நடன நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக, பிரதமர் இன்று இந்த யாத்திரையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத், ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம், விஸ்வகர்மா திட்டம் போன்ற மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படுவதுடன், இத்திட்டங்களின் பயனாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வகையில் இந்த யாத்திரை அமையும் என்று கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை, இந்த யாத்திரையில், 20 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ள இந்த யாத்திரை, முதல் கட்டமாக, பழங்குடியினர்  அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடைபெறுகிறது. இது ஜனவரி 25-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

 

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தின் ஏற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  நபார்டு வங்கியின் பொது மேலாளர், இந்தியன் வங்கியின்  துணை பொது மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் தேன்மலை அத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மண் வள அட்டை மற்றும் வேளாண் கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கான அனுமதி  ஆணை வழங்கப்பட்டது.

Tags: L MuruganCentral Minister
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

Next Post

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி – உண்மை நிலவரம் என்ன?

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies