ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: முக்கியத் தீவிரவாதி சுட்டுக்கொலை!
Sep 6, 2026, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: முக்கியத் தீவிரவாதி சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 23, 2023, 04:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 அதிகாரிகள் உட்பட 4 இராணுவத்தினர் உயிரிழந்த நிலையில், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் காலகோட் தாலுகா பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 சிறப்புப் படை கேப்டன்கள் உட்பட 4 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதேசமயம், தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தியதால், இரவோடு இரவாக கூடுதல் படை வரவழைக்கப்பட்டது.

இதன் பிறகு, அப்பகுதி முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை தீவிரவாதிகளுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் தொடர்ந்தது. இந்த என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு முக்கியத் தீவிரவாதி தனது கூட்டாளியுடன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கொல்லப்பட்ட முக்கியத் தீவிரவாதியின் பெயர் குவாரி என்பது தெரியவந்திருக்கிறது. இவன், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன். லஷ்கர் இ தொய்பா அமைப்பில் உயர் பதவி வகித்த பாகிஸ்தான் தீவிரவாதி. கடந்த ஒரு வருடமாக தனது குழுவுடன் இணைந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறான்.

டாங்கிரி மற்றும் கண்டி தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் மீண்டும் தீவிரவாதத்தை புதுப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான். குகைகளில் மறைந்திருந்து ஐ.இ.டி. வெடிபொருளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவன். துப்பாக்கிச் சுடும் பயற்சியும் பெற்றவன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: encounterjammu kashmirterrorist killed
Share
Tweet
SendShare
Previous Post

எக்ஸ் தளத்தில் எனக்கு கணக்கு இல்லை – சாரா டெண்டுல்கர்!

Next Post

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies