இஸ்ரேல் தாக்குதலில் மூத்த தளபதி பலி: ஹமாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Sep 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் மூத்த தளபதி பலி: ஹமாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 07:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் தாக்குதலில் தங்களது மூத்த மற்றும் உயர்மட்ட தளபதி ஒருவர் பலியானதாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டு இஸ்ரேல் வெளியேறியது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினா் காஸாவில் ஆட்சியைக் கைப்பற்றினா். அப்போதிருந்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீா் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினா். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனா்.

இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல், முப்படைகளையும் ஏவி விட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் திக்குமுக்காடிப்போன ஹமாஸ் தீவிரவாதிகள், பதுங்குக் குழிகளுக்குள்ளும், சுரங்கப் பாதைகளுக்குள்ளும் பதுங்கிக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எனினும், காஸா நகரையே உருத்தெரியாமல் இஸ்ரேல் இராணுவம் அழித்து விட்டது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 14,500 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்திருக்கும் காஸா நகர சுகாதாரத்துறை, சுமார் 3,000 பேரை காணவில்லை என்றும் கூறியிருக்கிறது.

மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகர மக்கள் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லாமலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இல்லாமலும் பரிதவித்து வருகின்றனர். இதனால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

ஆகவே, காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான அடிப்படை உதவிகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வழங்கி வருகின்றன. அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்க கத்தார் நாட்டின் உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.

இந்த நிலையில், இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், பிணைக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யத் தயாா் என்று ஹமாஸ் படை தெரிவித்தது. இது குறித்து அமைச்சரவைக் கூட்டி ஆலோசித்த இஸ்ரேல், பிணைக் கைதிகளை விடுவிக்க தற்காலிக போா் நிறுத்த உடன்படிக்கைக்கு சம்மதித்தது.

அதன்படி, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள். இஸ்ரேலும் தங்களது நாட்டு சிறையில் இருந்த 39 கைதிகளை விடுதலை செய்திருக்கிறது.

இந்த நிலையில்தான், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்களது அமைப்பின் மூத்த மற்றும் உயர்மட்டத் தளபதி ஒருவர் பலியாகி இருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஆயுதப் பிரிவின் உயர்மட்ட உறுப்பினராகவும், வடக்கு காஸாவில் உயர்மட்டத் தளபதியாகவும் பதவி வகித்த அகமத் அல் கந்தூர் என்பவர்தான் பலியாகி இருக்கிறார்.

எனினும், இவர் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்கிற தகவலை ஹமாஸ் வெளியிடவில்லை. அதேசமயம், இஸ்ரேல் இவரை கொல்ல பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags: killedHamas CommanderIsrael Attack
Share
Tweet
SendShare
Previous Post

வெளிநாடுகளில் திருமணம்: பிரதமர் மோடி சொன்னது என்ன?

Next Post

சமூக சேவையில் வெள்ளி விழா: தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies